Pages

Friday, 28 June 2013

காலங்கள் நம்மை கடத்தும் போதும்
நினைவுகளை மட்டும் விட்டு செல்கிறது

தடமாக

காதல்

உயிர் என்னும் காணிக்கை செலுத்தி
வலி என்னும் விரதம் இருந்தும்
கிடைக்காத வரமாய்

---உன் காதல்
இமைகள் இரண்டும் காதல் கொண்டு
இனணயும் வேளையில்
எங்கிருந்தோ வந்துவிடுகிறது
முதல் காதல் தோல்வியின் வலி
இமைகள் மீது பொறாமை கொண்டு அவற்றை
பிரித்தே வைக்கின்றேன்
இரவு முழுவதும்

Saturday, 22 June 2013

இனி வேண்டாம்
உன் காதல் விளையாட்டுக்கு நான் அடிமை அல்ல
உந்தன் நாடகம் இனி வேண்டாம்
சொல்லால் அடித்த பின் ஏன் இந்த காதல்
முதன்முறை உனர்ந்தேன் காதலின் மரணம்



Friday, 21 June 2013

காதல்

நடக்கும் பாதையின் தூரம் அறியாமல்
சிரிப்பின் காரணம் என்ன என்று யோசிக்காமல்
எங்கே போகிறோம் என்பது கூட தெரியாமல்
அந்த மாலையின் மழை சாரலில்
உன் கைகளை பிடித்து
கதைகளை பேசிக்
காற்றோடு கரைந்த நேரங்ளை
நினைத்து பார்க்கையில் ஏற்படும்
சிலிர்பினை பகிர்ந்து கொள்வதற்காவது வேண்டும்


“உன் காதல்”
தொலைந்து போனதில் கூட
மகிழ்ச்சி
நான் தொலைந்த இடம்
நீ

என்பதால்
என்னிடம் இருந்து உன் காதலை பரித்து சென்ற நீ
உன் நினைவுகளை மட்டும் ஏன் விட்டு சென்றாய்?
என் முதல் பயணம்
உன்னை தேடி
உன் நினைவுகளை சுமந்து..
உன் காதலை மீட்க அல்ல
உன் நினைவை கொடுத்து
என்னை மீட்க
என் அடுத்த பயணமும் தேடலாகி போனது
தேடப்படுவது
நீ எங்கேயோ தொலைத்து விட்ட

என்னை!