திருச்சி
என் வாழ்வின் மிக அழகான அத்தியாயங்களை வண்ணங்களால் வார்த்தைகளால் வடிவமைத்து வாழ்க்கையாகியது திருச்சி
குழந்தை பருவத்தின் இறுதி நிலையாகவும் முழு மனித பருவத்தின் முதல் நிலையாகவுமான கல்லூரி வாழ்க்கை இங்கே அமைய பெற்றது தவமின்றி கிடைத்த வரம்.
திருச்சியில் நான் வாழ வாய்க்கப்பெற்றது ஐந்தே ஆண்டுகள் தான் என்றாலும் அந்த ஐந்து வருடம் என் வாழ்க்கையின் விருப்பப் பாடம்.
நட்பு,காதல்,ஏமாற்றம்,வெற்றி,நம்பிக்கை,துரோகம்,இன்பம்,தோல்வி,பூரிப்பு,புறகணிப்பு,அவமானம்,அவதானிப்பு என்று இங்கு நான் அனுபவமுற்றது ஏராளம். தனிமையை தவிர்த்து.
அது ஏனோ,தனியாய் நடந்தாலும் தனிமையை உணர்ந்ததில்லை திருச்சியில்.
ஆயிரமாயிரம் நினைவுகள் எங்கு சென்றாலும்.
சொட்டு சொட்டாய் இலையில் இருந்து தரைக்கு வீழும் மழை துளி போல பழைய ஞாபகங்களில் புன்சிரித்துக்கொள்கிறேன் .
இது என் சொந்த ஊர் இல்லை என்றாலும் சொந்தங்களை உருவாக்கி கொடுத்த ஊர் -நட்பின் பெயரால் .
அகண்டு விரிந்த எங்கள் காவிரியின் கரை ஓரத்தில் நின்று நகரின் அழகை ரசிப்பது - வரம்.
கரை(ல)ந்தாலும் இப்பொண்ணி நதியில் கரைந்திட வேண்டும் - தவம் .
திருச்சியின் மீது நான் கொண்டிருக்கும் காதல் அல்லது பற்றானது என் வாழ்கையை மீண்டும் இந்த மலைகோட்டை நகரிலேயே அமைய செய்யும்.எப்போது,எப்படி என்பன மட்டும் தான் நிகழ வேண்டியது .
இவ்வாழ்க்கைகான விருப்பம் என்பது ஓர் ஈர விறகை போல கனத்துவிடுகிறது அதற்கு எளிதில் எரியூட்டி விட முடிவதில்லை.
திருச்சி என் நிறைவு,அமைதி,பெருமை.
அங்கே வாழ்க்கை வாழபட்டது
இங்கோ வாழ்க்கை இயங்கபடுகிறது.