Pages

Tuesday, 4 February 2014

அன்று
உன்னை பார்பதற்காகவே  நேரத்தை நிற்க செய்தேன் 
பின்பு 
உன்னை பார்க்க  நேரம் ஒதுக்கினேன் 
இன்று 
நேரம் கிடைக்கையில் உன்னை பார்த்து கொள்கிறேன் 
புகைப்படங்களில்
.
.
அன்று 
உனக்காக நான் வாழ்ந்தேன் 
பின்பு 
நமக்காக நாம் வாழ்ந்தோம் 
இன்று 
எனக்காக யாரோ வாழ்கிறார்கள் 
மனம் தேற்றி கொள்கிறேன் 
.
.
காலம்  நம்மை கடத்தலாம் 
வாழ்க்கை புதியதாய் தோன்றலாம் 
என்னை கடந்து போய்  விட்டதாகவும்  
உன் கனவுகளை கலைத்து புதிதாய் கனவொன்று தோன்றலாம் 
அனால் 
நாம் விரல் பற்றி ஊர் சுற்றி 
எனக்காக நீ  உனக்காக நான் என்று உண்மையாய் பேசி 
உன் சோகம் என்னுள் புதைத்த நாட்களை எண்ணுகையில் 
உன் விழி ஓரம் ஒரு துளி நீர் கசியும் என்றால் 
நிச்சயமாய் 

என் பெயராவது உன்னுடன் வாழும் உன் மகளின் ரூபத்தில் 

No comments:

Post a Comment